‘
புதிய இணைப்பு
மட்டக்களப்பில் கரிநாள் போராட்டம் ஆரம்பமானதுடன், கல்லடிப்பால பிரதான வீதியை மறித்து பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
இலங்கையின் 76ஆவது சுதந்திரதினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி மட்டக்களப்பில் ஏற்பாடுசெய்யப்பட்ட கரிநாள் பேரணியை தடுக்கும் முகமாக பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடும் மழைக்கு மத்தியிலும் மட்டக்களப்பு புனித செபஸ்தியார் ஆலயத்தை சுற்றி போராட்டக்காரர்களும், வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க உறுப்பினர்களும் குவிந்துள்ள நிலையில் அவர்களை தடுக்க பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளதால் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் போராட்டத்தில் கலந்துக்கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனும் வருகைதந்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (04.02.2024) இலங்கையின் சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அனுஷ்டிப்பதற்கு முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை தடுக்கும் வகையில் பொலிஸாரினால் தடை உத்தரவுகள் இரவோடு இரவாக தடைஉத்தரவுகள் வழங்கப்பட்டிருந்தது.
இதன்படி மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு சிறு சமூக உறுப்பினர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் இவ்வாறான தடை உத்தரவுகளை பொலிஸார் வழங்கியுள்ளனர்.
மேலும், பேரணியை தடுத்து நிறுத்த பிரதான வீதியில் வீதித்தடைகளையும் ஏற்படுத்தி நீர்தாரைப்பிரயோக வாகனங்களுடன் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.