கடந்த மாதம் 22 ஆம் திகதி பெலியத்தை பகுதியில் 5 பேர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கொலை சம்பவத்துக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹபராதுவை பகுதியில் வைத்து மாத்தறை வலய சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் அதிகாரிகளால் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பெலியத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.