கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக உள்ள பயணிகள் மேம்பாலத்தை பராமரிக்க உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் பாரிய விபத்தை தடுக்க முடியாது என அருகில் உள்ள வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
25 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனம் செலுத்தாததால் தற்போது பாலம் நிற்கும் பிரதான தூண்கள் பழுதடைந்துள்ளது. சில இடங்களில் அடிவாரங்கள் வழுக்கி தட்டுகள் பழுதடைந்து கிடப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த பாலத்தை தினமும் சுமார் பத்தாயிரம் வெளிநாட்டவர்கள் மற்றும் உள்நாட்டு மக்கள் கடந்து செல்கின்றனர். அவர்களில் பாலத்தில் வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தும் வியாபாரிகளும் உள்ளனர்.
சில காலமாக பயணிகள் பாலத்திற்கு பிளாஸ்டர்கள் பூசி ஏமாற்று வேலைகள் மேற்கொள்வதற்கு பொறுப்பான அதிகாரிகள் முயற்சி அப்பகுதி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
கொழும்பு மத்திய பகுதியில் அமைந்துள்ள இந்த பயணிகள் பாலத்தை அத்தியாவசிய பணியாக கருதி புனரமைத்து அப்பாவி பயணிகளின் உயிர்களை காக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.