ஆட்கடத்தல் மற்றும் மனித விற்பனை தொடர்பான சம்பவங்களை பொறுப்புடன் செய்தி அறிக்கையிடுதல் தொடர்பில், கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சிப் பட்டறை மட்டக்களப்பில், ஐ.ஓ.எம் நிறுவனத்தால் நடாத்தப்படுகிறது.
ஐ.ஓ.எம் நிறுவனத்தின் சிரேஸ்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் இம்தாத் பாஸார் வளவாளராக கலந்து கொண்டுள்ளார். ஆட்கடத்தல் மற்றும் மனித விற்பனை தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஐ ஓ எம் நிறுவனம் வடக்கு கிழக்கு மாகாணங்களை மையப்படுத்தி விழிப்புணர்வு நிகழ்வுகளை முன்னெடுத்த வருகின்றது. இதனொரு கட்டமாகவே, செய்தி அறிக்கையிடல் தொடர்பில், ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை நடாத்தப்படுகிறது