இலங்கையிலிருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் ஏதிலிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
குறித்த ஐவரும் வவுனியாவை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் இன்று அதிகாலை தனுஷ்கோடி, அரிச்சல்முனை ஒன்றாம் மணல்திட்டு பகுதியில் வைத்து ராமேஸ்வரம் கரையோர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் குறித்த ஐவரும் மேலதிக விசாரணைகளுக்காக மண்டபம் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தமிழக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு ஏதிலிகள் சென்றவர்களின் எண்ணிக்கை 293 ஆக அதிகரித்துள்ளது.