வவுனியா புளியங்குளம், பழையவாடியில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான பண்ணைகாணியில் இருந்து யானை ஒன்று சடலமாக மீட்கப்பட்டது.
நேற்றுமுன்தினம் (08) குறித்த காணியில் யானை ஒன்று சடலமாக கிடப்பதை அவதானித்த காணியின் உரிமையாளர் புளியங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தார்.
அதற்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற புளியங்குளம் பொலிஸார் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் யானையின் இறப்பு தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்தனர்..
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/02/WhatsApp-Image-2024-02-09-at-16.20.45_4af7da45-edited.jpg)
உயிரிழந்த யானை24 வயது மதிக்கத்தக்கது என தெரிவிக்கப்படுவதுடன், சடலம் நேற்று உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில், அக்காணியின் உரிமையாளர் புளியங்குளம் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.