மட்டக்களப்பில் காலநிலை சீரற்ற காலநிலை காரணமாக மீன்பிடித் தொழிலை இழந்துள்ள மீனவர்களுக்கு உலர் உணவு நிவாரணப் பொருட்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
மட்டக்களப்பு பால மீன்மடு மீனவர் சங்கத்தினர் சேகரிக்கப்பட்ட நிதியில் சுமார் எட்டு லட்சம் ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொருட்கள் நிவாரண உதவியாக இன்று (11) வழங்கி வைக்கப்பட்டது.
பால மீன்மடு மீனவர் கூட்டுறவு சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் வீ. மனோகரன் தலைமையில் நடைபெற்ற இந்த விசேட நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜெ.ஜே. முரளிதரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு குறித்த பிரதேசத்தில் மீனவத் தொழிலை இழந்துள்ள மீனவர்களுக்கான இந்த உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்புக்குழுவின் உறுப்பினர் அப்துல் லத்தீப் , மாவட்ட மீனவர் சமாசத்தின் தலைவர் ப.கே. பத்மநாதன் கடற்றொழில் திணைக்கள பரிசோதகர். உள்ளிட்ட பல பிரமுகர்கள் பிரசன்னமாகயிருந்தனர்.
இந்நிகழ்வில் குறித்த மீனவர் சங்கத்தினரால் பாலமீன்மடு மீனவர் இறங்குதுறை மண்ணரிப்பு தடுக்க நடவடிக்கை ,பாலமீன்மடி லைட் கவுஸ் கலங்கரை விளக்குக்கு பொருத்தமான சக்தி வாய்ந்த மின்குமிழ் பொருத்துதல்,மற்றும் வர்ணம் பூசி அழகு படுத்துதல் மீன்பிடிக்கு தடையான நவம்பர்,டிசெம்பர் ஓய்வு காலத்தில் நிவாரணம் வழங்க நடவடிக்கைஎடுத்தல் போன்றகோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன .இந்த கோரிக்கைகள் நிறைவேற்றித்தர நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜெ.ஜே. முரளிதரன் இங்கு தெரிவித்தார், அரசாங்க அதிபர் திருமதி ஜெ.ஜே. முரளிதரன் பாலமீன்மடு கலங்கரை விளக்கம் , வாவிமண்ணரிப்பு,பாதிப்புக்களை நேரில் சென்று பார்வையிட்டார்.