கையடக்கத் தொலைபேசிகளுக்கான சிம் அட்டைகளை சரியான முறையில் பதிவு செய்யுமாறு பொது மக்களை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
சட்டவிரோதமான செயல்களுக்கு முகம்கொடுக்காமல் இருக்க சிம் அட்டைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
அதன்படி கையடக்கத் தொலைபேசிகளில் #132# என டைப் செய்து பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க முடியும் என ஆணைக்குழுவின் பிரதி பணிப்பாளர் மேனகா பத்திரன தெரிவித்துள்ளார்.
மேலும் ஒருவரின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் கீழ் தங்களுக்குத் தெரியாமல் வேறு சிம் கார்டுகள் வழங்கப்பட்டிருந்தால் அதன் இணைப்பை உடனடியாக துண்டிக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மற்றவர்களின் பெயர்களில் பதிவு செய்யப்பட்ட சிம் அட்டைகளை பயன்படுத்தி பல சட்டவிரோதச் செயல்கள் நடப்பதாக அண்மைக் காலங்களில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆகவே தங்கள் பெயரில் பதிவு செய்யப்பட்ட சிம்கள் இதுபோன்ற சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டால் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.