Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜனாதிபதியாக ரணில் தொடர்ந்தும் இருந்தால் நாடு முழுமையாக வளர்ச்சிபெறும்; அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை!

ஜனாதிபதியாக ரணில் தொடர்ந்தும் இருந்தால் நாடு முழுமையாக வளர்ச்சிபெறும்; அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை!

3 years ago
in செய்திகள்

நாட்டில் நடைமுறையிலுள்ள நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை மூலம் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்று நம்புவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பருத்தித்துறை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று(13) பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்பின்னர் ஊடகங்களுகுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

காலத்துக்கு காலம் அரசியல் காரணங்களுக்காக விவாதிக்கப்படும் விடயங்களுள் இந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி விடயமும் ஒன்று.

இதேநேரம் தமிழரது தரப்பை எடுத்தக்கொண்டால் இந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை கொண்டுவரப்பட்ட வேளையில் அதை வரவேற்றார்கள். அதன்பின்னர் அது தேவை இல்லை என இன்னொரு தரப்பு கூறியபோதும் அதையும் வரவேற்றுள்ள நிலைமைதான் இருக்கின்றது.

ஆனால் இன்று நாடு இருக்கின்ற ஒரு சூழலில் நிறைவேற்று அதிகாரத்திற்குரிய அவசியம் இருப்பதாகவே தெரிகின்றது. காரணம் நிறைவேற்று அதிகாரத்துக்கு ஊடாகத்தான் நாம் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என நான் நம்பகின்றேன்.

இதேநேரம் நிறைவேற்று அதிகாரம் என்பது உலகின் வேறு பல நாடுகளிலும் இருக்கின்ற ஒரு விடயம்தான். இருந்தபோதும் நாடாளுமன்றத்துக்கும் நிறைவேற்று அதிகாரத்திற்கும் இடையில் சம தன்மை பேணப்படவேண்டும் என்ற அபிப்பிராயத்தையே நான் கொண்டுள்ளேன்.

மேலும், நாடு தற்போது இருக்கின்ற சூழ்நிலையில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே தொடர்ந்தும் ஜனாதிபதியாக இருக்கவேண்டும் என நான் நினைக்கின்றேன். அதுமட்டுமல்லாது இதை நான் பல தடவைகள் பொதுவெளியிலும் கூறிவந்திருகின்றறேன்.

அதேநேரம், தென்னிலங்கையில் நாட்டை சீர்தூக்கிச் செல்லக்கூடிய வகையில் வேறு தலைவர்கள் இருப்பதாகவும் எனக்கு தெரியவில்லை. அதாவது செயலற்றுக் கிடந்த இருந்த நாட்டை மிகக் குறுகிய காலத்துக்குள் முடியுமானவரை சீர் செய்து ஓடச் செய்துள்ளார் இன்றைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க.

அவர் தொடர்ந்தும் ஜனாதிபதியாக இருப்பாரானால் நாடு முழுமையாக வளர்ச்சிபெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இதேநேரம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைப் பொறுத்தளவில் நடைமுறை சாத்தியமான அரசியல் தீர்வையே கொண்டுள்ளோம். குறிப்பாக இலங்கை இந்திய ஒப்பந்தம் தான் தீர்வுக்கான சிறந்த ஆரம்பம் என நாம் பல தசாப்தங்களாகக் கூறிவந்துள்ளோம்.

இதையே அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலும் தெளிவாகத் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் குடாநாட்டில் அதிகரித்துள்ள சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது மிக அவசியமானதாக உள்ளது. இதற்காக ஒவ்வொரு பிரதேசங்களிலும் கிராமிய குழுக்களை அமைக்க திட்டமிட்டுள்ளேன்.

இதனூடாக சமூகவிரோத செயற்பாடுகள், போதைப்பொருள் மற்றும் கால்நடை களவு உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயற்பாடுகளை கட்டப்படுத்த முடியும் என நம்புகின்றேன் எனவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

அனுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் 20 வருடங்களுக்கு நீடிக்கும்; ஹிஸ்புல்லாவிற்கு எதிராக உடனடி விசாரணை நடத்த வேண்டும்’ . ஈரோஸ் பிரபா
காணொளிகள்

அனுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் 20 வருடங்களுக்கு நீடிக்கும்; ஹிஸ்புல்லாவிற்கு எதிராக உடனடி விசாரணை நடத்த வேண்டும்’ . ஈரோஸ் பிரபா

August 17, 2026
அமெரிக்கா–தென் கொரியா கூட்டு இராணுவப் பயிற்சிகளை குறைக்க ட்ரம்ப் திட்டம்!
உலக செய்திகள்

அமெரிக்கா–தென் கொரியா கூட்டு இராணுவப் பயிற்சிகளை குறைக்க ட்ரம்ப் திட்டம்!

August 17, 2026
பாசிக்குடா கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியது!
செய்திகள்

பாசிக்குடா கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியது!

August 17, 2026
கல்முனை வடக்கு வைத்தியசாலை சீருடை விவகாரம்; ஆறு தொழிற்சங்கங்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம்!
செய்திகள்

கல்முனை வடக்கு வைத்தியசாலை சீருடை விவகாரம்; ஆறு தொழிற்சங்கங்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம்!

August 17, 2026
கற்பிட்டியில் மோட்டார் சைக்கிள் விபத்து; தந்தையும் 7 வயது மகனும் உயிரிழப்பு!
செய்திகள்

கற்பிட்டியில் மோட்டார் சைக்கிள் விபத்து; தந்தையும் 7 வயது மகனும் உயிரிழப்பு!

August 17, 2026
செம்மணி புதைகுழி விவகாரம்; தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ் அரசியல் தரப்புகள் மீது தமிழ்த்தேசிய அவதானிப்பு மையம் விமர்சனம்!
செய்திகள்

செம்மணி புதைகுழி விவகாரம்; தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ் அரசியல் தரப்புகள் மீது தமிழ்த்தேசிய அவதானிப்பு மையம் விமர்சனம்!

August 17, 2026
Next Post
ஜனாதிபதி தேர்தல் குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்பு!

ஜனாதிபதி தேர்தல் குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு