ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இஸ்ரேலின் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இஸ்ரேலின் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் மிரி ரெகவி உட்பட அவர்களின் தூதுக்குழு இலங்கை வந்துள்ள நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ஹமாஸ் போராளிகள் வசமுள்ள இஸ்ரேலியர்களை மீட்டெடுக்கும் இஸ்ரேலின் திட்டங்களுடன் எப்பொழுதும் இலங்கை உறுதுணையாக இருக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஆனால் காஸா பகுதியில் இடம்பெறும் சண்டைகள் உடன் நிறுத்தப்படல் வேண்டும் எனவும் ஜனதிபதி வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேல் என்ற நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி பலஸ்தீன் என்ற நாட்டை உருவாக்க இலங்கை எப்பொழுதும் துணை நிற்கும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க, ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் சர்வதேச விவகாரம் தொடர்பான ஆலோசகர் தின்னுத கொலம்பகே ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.