எக்ஸ் – பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துக்கு உள்ளானதில் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டபாதிப்புகளுக்கு இழப்பீடு
கோரி சிங்கப்பூர் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமைவழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் உள்ள சட்டநிறுவனம் ஒன்றிடம் இந்த நடவடிக்கைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று சட்டமா அதிபர் சஞ்ஜெய் இராஜரட்ணம் தெரிவித்துள்ளார். அமைச்சரவை அனுமதியுடன் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. குறித்த இழப்பீட்டு தொகை குறித்து எதிர்வரும் நாட்களில் நீதிமன்றத்துக்கு அறிவிக்கவுள்ளதாகவும் சட்டமா அதிபர் மேலும் தெரிவித்தார். இது குறித்து கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையிடமிருந்து விரிவான அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் சட்டமா அதிபர் கூறினார்.