இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் தாதியர் சேவைக்காக 236 இலங்கையர்கள் இஸ்ரேலுக்கு சென்றுள்ளனர்.
இஸ்ரேலில் தொழில்வாய்ப்பை பெற்ற 154 பேருக்கு தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் நேற்றைய தினம் விமான சீட்டுக்கள் வழங்கப்பட்டன.

அவர்களில் 54 பேர் தாதியர் சேவையிலும், 95 பேர் விவசாயத் துறையிலும் ஈடுபடவுள்ளனர்.