புத்தாண்டுக்கு முன்னதாக சாமானியர்கள் அருந்தும் சிறப்பு சாராயத்தின் விலையை அரசாங்கம் குறைக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தெரிவித்துள்ளார்.
சாராயத்தின் விலைகள் அபரிமிதமாக உயர்ந்துள்ளதாகவும், அதனால் மக்கள் கள்ளச்சாராயத்தை (கசிப்பு) குடிக்க முனைவதாகவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
“சாராய விலை உயர்ந்துள்ளது. மக்கள் தற்போது கள்ளச்சாராயம் குடிக்கின்றனர். மதுக்கடைகள் வெறிச்சோடி கிடக்கின்றன. மக்கள் தினமும் ‘கசிப்பு’ குடிக்க முடியாது. புத்தாண்டுக்கு ‘சாராயம்’ குடிக்க வேண்டும்,” என அவர் உணர்ச்சிப்பூர்வமாக தெரிவித்தார்.
ஒரு போத்தல் சாராய விலையை 1500 ரூபாவாக குறைக்க முடியும் என தெரிவித்த அவர் . சாராய உற்பத்திற்கு தேவையான சேர்மானங்களை பெல்வத்தை, செவனகல மற்றும் எதிமலே ஆகிய இடங்களில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும் எனவும் கூறினார்.