மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்/ஆரையம்பதி சுப்பிரமணிய வித்தியாலயத்தில் “சிகரம் தொடும் அகரம் கற்க”என்னும் தொனிப்பொருளில் தரம் ஒன்று மாணவ, மாணவிகளை வரவேற்கும் நிகழ்வு நேற்று (2024.02.22) இடம்பெற்றது.
பிரதி அதிபர் திரு T.ஜெயகாந்தன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றதுடன், மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலை மேம்பாட்டுத் திட்ட இணைப்பாளர் திரு K.சிவராசா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/02/IMG-20240222-WA0027-1-1024x506.jpg)
இந்நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள், புதிய மாணவர்கள் என்போரை பாடசாலையின் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவர்கள் மலர்மாலை அணிவித்து கௌரவத்துடன் வரவேற்று, கூட்ட மண்டபத்திற்குள் அழைத்து செல்லப்பட்டனர்.
தரம் இரண்டு மாணவ மாணவிகளால் சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், இங்கு ஆங்கில மொழி மூலமாக வரவேற்புரை மற்றும் தாய் பற்றிய சிறப்பான பேச்சும், பாடல்களும் அரங்கேற்றப்பட்டிருந்தது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/02/IMG-20240222-WA0028-1024x723.jpg)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/02/IMG-20240222-WA0029-484x1024.jpg)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/02/IMG-20240222-WA0030-484x1024.jpg)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/02/IMG-20240222-WA0031-484x1024.jpg)
அதேசமயம் தரம் ஒன்று வகுப்பு ஆசிரியை அவர்களால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டு நிகழ்வுகள் நிறைவுபெற்றது.