தெலுங்கானா நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி லாஸ்யா நந்திதா (37), ஹைதராபாத்தில் சாலையை பிரிப்பதற்காக கட்டப்பட்ட தடுப்புச்சுவரில் அவர் பயணித்த கார் மோதி ஏற்பட்ட விபத்தில் இன்று (23) உயிரிழந்தார்.
நந்திதா பயணித்த காரை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் விபத்து நேரிட்டதாகவும், அதிகாலை 5.30 மணியளவில் இந்த விபத்து நடந்ததாகவும் ஹைதராபாத் காவல்துறையினர் தெரிவித்தனர்.
விபத்து நடந்த இடத்திலேயே நந்திதா உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். சாரதி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பாரத ராஷ்டிர சமிதி அரசியல் கட்சியின் தலைவராகவும் இருந்த அவர் இந்த மாதத்தில் சந்தித்த இரண்டாவது கார் விபத்து இதுவாகும்.10 நாட்களுக்கு முன்பு அவர் கார் விபத்தை எதிர்கொண்டார், அதில் அவர் சிறிய காயங்களுக்கு ஆளானார்.