யாழ்ப்பாணத்தில் ஃபிலிம் சிற்றியொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக, மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் தெரிவித்தார். அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த அவர், மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு விஜயம் செய்த பின்னர் ஊடகவியலாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே, இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்த போது, ஃபிலிம் சிற்றி ஆரம்பிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டன. கலை, கலாசாரம், பொருளாதார ரீதியான அணுகல் தொடர்பாக யாழ்ப்பாணத்திலுள்ள பல நண்பர்களுடன் கலந்துரையாடப்பட்டன. எனது தந்தையின் வழிமுறைகளை பின்பற்றி, இவ்வாறான பல முன்னேற்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளேன்” என்றார். வடக்கு மாகாணத்தில் மிக முக்கியமாக யாழ்ப்பாண மாவட்டம் முன்னேற்றம் அடைய வேண்டிய இடமாகக் காணப்படுவதாகவும் எதிர்வரும் 5 வருடங்களில் அபிவிருத்தி சார்ந்த விடயங்களில் முன்னேற்றத்தை அவதானிக்கமுடியுமெனவும், அவர் தெரிவித்தார்.