Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
RCB அணியின் தலைவருக்கு அபராதம்!

RCB அணியின் தலைவருக்கு அபராதம்!

3 years ago
in விளையாட்டு

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மெதுவாக பந்து வீசிய காரணத்தால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ரூ. 24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக் கிழமை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 190 ரன்களை குவித்தது. விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற டூப்ளசிஸ் 39 பந்தில் 62 ரன்னும், மேக்ஸ்வெல் 44 பந்துகளில் 77 ரன்களும் எடுத்து அணியின் ரன் குவிப்புக்கு உதவினர்.

190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 182 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 47 ரன்னும், தேவ்தத் படிக்கல் 52 ரன்னும் எடுத்தனர். இந்த போட்டியின்போது தாமதமாக பந்து வீசினார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளார் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி. இதற்காக அவருக்கு ரூ. 24லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி கடந்த ஞாயிறு அன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் 2 ஆவது பந்து வீசிய பெங்களூரு அணி குறிப்பிட்ட நேரத்தை விடவும் அதிக நேரம் எடுத்துக் கொண்டு பந்து வீசியது. இது ஐபிஎல்லின் நடத்தை விதிகளை மீறிய செயலாகும். இதன் அடிப்படையில் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ரூ. 24 லட்சம் அபராதமாக விதிக்கப்படுகிறது. பெங்களூரு அணியில் ஆடும் லெவன் மற்றும் இம்பேக்ட் ப்ளேயர் ஆகியோருக்கு போட்டிக்கான கட்டணத்திலிருந்து 25 சதவீதம் அல்லது ரூ. 6 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

இலங்கை விளையாட்டில் புதிய வரலாறு; ஈட்டி எறிதலில் இலங்கை வீரர் புதிய சாதனை!
செய்திகள்

இலங்கை விளையாட்டில் புதிய வரலாறு; ஈட்டி எறிதலில் இலங்கை வீரர் புதிய சாதனை!

June 5, 2026
மூன்று தேசிய விளையாட்டுச் சங்கங்களின் பதிவு தற்காலிக இடைநிறுத்தம்
செய்திகள்

மூன்று தேசிய விளையாட்டுச் சங்கங்களின் பதிவு தற்காலிக இடைநிறுத்தம்

June 2, 2026
தொடர்ந்து இரண்டாவது முறையாக ஐ.பி.எல் கிண்ணத்தை கைப்பற்றியது ஆர்.சி.பி
செய்திகள்

தொடர்ந்து இரண்டாவது முறையாக ஐ.பி.எல் கிண்ணத்தை கைப்பற்றியது ஆர்.சி.பி

June 1, 2026
மட்டக்களப்பு வீராங்கனை தவிசாலினி ஆசிய மகளிர் மல்யுத்த சாம்பியன்ஷிப்பிற்கு தேர்வு!
செய்திகள்

மட்டக்களப்பு வீராங்கனை தவிசாலினி ஆசிய மகளிர் மல்யுத்த சாம்பியன்ஷிப்பிற்கு தேர்வு!

May 21, 2026
வாழைச்சேனை சேகரம் கிரான் ஜோபியல் சிறுவர் விளையாட்டு கழகத்தின் வருடாந்த விளையாட்டு நிகழ்வு
செய்திகள்

வாழைச்சேனை சேகரம் கிரான் ஜோபியல் சிறுவர் விளையாட்டு கழகத்தின் வருடாந்த விளையாட்டு நிகழ்வு

May 1, 2026
இலங்கை கிரிக்கெட்டின் தலைவரை பதவி விலகுமாறு ஜனாதிபதி உத்தரவு
செய்திகள்

இலங்கை கிரிக்கெட்டின் தலைவரை பதவி விலகுமாறு ஜனாதிபதி உத்தரவு

April 22, 2026
Next Post
72 மணித்தியாலம் நிறுத்தப்பட்ட போர்; வெளியேறும் மக்கள்!

72 மணித்தியாலம் நிறுத்தப்பட்ட போர்; வெளியேறும் மக்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு