சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை தவிர எமக்கு வேறு எந்த மாற்றுவழியும் இல்லை. மாற்றுவழிகள் எதுவும் முன்மொழியப்படவும் இல்லை என்று தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டை கட்டியெழுப்ப அதிகார மையம் பற்றி மாத்திரம் சிந்திக்கக் கூடாது. இதனை நாம் முன்னெடுக்கத் தவறினால் ஓரிரு ஆண்டுகளில் எங்கள் எவருக்கும் வாழமுடியாத நிலை ஏற்படும். எனவே, அனைவரும் இணைய வேண்டும் – என்றும் கூறியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட உரையாற்றினார். இதன்போது, இலங்கை மறுமலர்ச்சி பாதையில் பிரவேசித்து மீண்டும் உருவாகி வருகிறது. அதனை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு முழு நாட்டின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் நாட்டில் காணப்பட்ட கலவரம், தீ வைப்பு, அரச வங்குரோத்து நிலைமை போன்ற காரணங்களால் வீழ்ச்சியடைந்த இலங்கையின் பொருளாதாரத்தை 8 மாதங்களில் வெற்றிகரமாக மாற்ற முடிந்தது. அது ‘இலங்கையின் மீள்வருகைகதை” (Sri lanka comeback story) என அழைக்கப்படுவதாகவும் ஜனாதிபதிகுறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் 16 தடவைகள்உடன்படிக்கைகளை மேற்கொண்ட போதிலும்,அந்த உடன்படிக்கைகள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படாமையால் தோல்வியடைந்ததை ஜனாதிபதி நினைவுகூர்ந்தார். சர்வதேசநாணய நிதியத்துடன் ஒப்பந்தம்செய்வதை தவிர வேறு மாற்றுவழிநாட்டில் இருக்கவில்லையென்பதால்தற்போ தைய பலவீனங்களை ஒதுக்கிபுதிய திட்டத்தில் 17ஆவது தடவையாகஇணைய வேண்டியுள்ளதாகவும் அவர்குறிப்பிட்டார்.தேசிய கடனை மறுசீரமைப்பதில் ஊழியர் சேமலாப நிதியத்தின் உறுப்பினர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதுஎன வலியுறுத்திய ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க, நிதி ஸ்திரத்தன்மையைஏற்படுத்துவதற்கும் குறைந்த வருமானம்பெறும் மக்களின் பாதுகாப்புக்கானசமூக பாதுகாப்பு வலையமைப்பைமுன்னெடுக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.நாட்டின் உள்நாட்டுக் கடனை மறுசீரமைக்க வேண்டும் என்று வெளிநாட்டு கடனாளிகள் ஆலோசனைவழங்கியுள்ளனர். எனினும் இது குறித்து இறுதித் தீர்மானம் இதுவரை எடுக்கவில்லை. எவ்வாறாயினும் வெளிநாட்டுகடனாளிகளுடன் உரையாடல்களை ஆரம் பிக்கும்போது உள்நாட்டுக் கடன்களை மறுசீரமைப்பது தொடர்பில்தீர்மானம் எடுக்க வேண்டும்.மேலும், உள்நாட்டுகடன்களை மறுசீரமைப்பதால் சிலர் கூறுவது போல்உள்ளுரர் வங்கிகள் மற்றும் பங்குச்சந்தைகளில் எந்த நெருக்கடியும் ஏற்படாது.
ஊழியர் சேமலாப நிதிய உறுப்பினர்களுக்கும் எந்த அநீதியும் ஏற்படாமல்இருப்பதை அரசாங்கம் உறுதிசெய்யும்
என்றும் அவர் கூறினார்.இலங்கை வெளிநாட்டு கடனாளிகளுடன் தனித்தனியாக கலந்துரையாடல்களை ஆரம்பிக்கும். அங்கு பாரிஸ்கிளப் மற்றும் இந்தியாவுடன் கலந்துரையாடல்கள் ஒரே மேடையில் நடைபெறும் மற்றும் சீனாவுடன் தனியான கலந்துரையாடல் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
தவிர, சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை தவிர எமக்கு வேறு எந்தமாற்றுவழியும் இல்லை. மாற்றுவழிகள் எதுவும் முன்மொழியப்படவும் இல்லை.வேறு மாற்றுவழி இல்லாவிட்டால் இதனை நாம் அங்கீகரிக்க வேண்டும்.அனைவரும் ஒன்றிணைந்து இதனை அங்கீகரிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைக்கிறேன் – என்றார்.தொடர்ந்து, ஐ. எம். எவ். 6மாதங்களுக்கு ஒரு தடவையே எமது நாட்டுக்கு வருகிறது. குறைபாடுகள் இருந்தால் பேச்சு நடத்தித் தீர்க்கலாம். தேசிய பேரவை போன்று பல குழுக்கள் உள்ளன. முழு பாராளுமன்றத்தையும் அரசாங்கமாக மாற்றவேண்டும். அதற்காக நாம் உழைக்க வேண்டும். இது தொடர்பில் பல கருத்துகள் இருக்கலாம். அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அதற்காக அனைவரும் ஒன்றுபட வேண்டும். பல்வேறு கருத்துகள் இருக்கலாம். அனைவரும் இந்த திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 2048 ஆம் ஆண்டாகும் போது நாம் நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். இன்றேல் நாம் இளைஞர்களை காட்டிக் கொடுத்தவர்களாக ஆகியிருப்போம். அவர்களின் எதிர்காலத்தை நாசமாக்கியதாக ஆகிவிடும் இளைஞர்கள் குறித்து சிந்திக்க வேண்டும். அதிகார மையம் பற்றி மாத்திரம் சிந்திக்கக் கூடாது. இதனை நாம் முன்னெடுக்கத் தவறினால் ஓரிரு ஆண்டுகளில் எங்கள் எவருக் கும் வாழமுடியாத நிலை ஏற்படும். எனவே, அனைவரும் இணைய வேண்டும். 2048 ஆம் ஆண்டு வரையான கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. முதல் 5 வருடங்களுக்கான திட்டத்தை செயல்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – என்றும் கூறினார்.