Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கும் சுமந்திரன்

வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கும் சுமந்திரன்

1 year ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகத் தான் களமிறங்கவுள்ளார் என்று அக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் அறிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினாக இருக்கும் சிவஞானம் சிறீதரன், தான் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடமாட்டார் என ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில், வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகத் தான் போட்டியிடவுள்ளார் என்று சுமந்திரன் கூறியுள்ளார்.

உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர்களை ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்கள் நேற்று (16) , யாழ். நல்லூரில் உள்ள சுமந்திரனின் இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.

“இந்தச் சந்திப்பின்போது அடுத்து வரும் மாகாண சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகத் தானே களமிறங்கப் போகின்றார் என்று சுமந்திரன் எங்களிடம் கூறினார்.” – என்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் இணைத்தலைவர்களில் ஒருவரான த.சித்தார்த்தன் தெரிவித்தார்.

“ஆனால், சுமந்திரனின் இந்த நிலைப்பாட்டுக்கு ஆதரவு அல்லது எதிர்ப்பு என்ற விடயங்கள் குறித்து எதுவும் நாங்கள் பேசவில்லை. மேலும் உள்ளுராட்சி சபைகளில் ஒன்றிணைந்து ஆடசியமைப்பது குறித்து இந்தச் சந்திப்பில் பேசப்பட்டாலும் மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்குவது தொடர்பில் எதுவும் பேசவில்லை.” – என்று சித்தார்த்தன் மேலும் கூறினார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரிக்கு அதிபரை நியமிக்க கோரிக்கை
செய்திகள்

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரிக்கு அதிபரை நியமிக்க கோரிக்கை

June 22, 2026
2025 இல் இலங்கையில் அரிசி இறக்குமதி 40% அதிகரிப்பு; அரச அறிக்கையில் முக்கிய தகவல்கள்!
செய்திகள்

2025 இல் இலங்கையில் அரிசி இறக்குமதி 40% அதிகரிப்பு; அரச அறிக்கையில் முக்கிய தகவல்கள்!

June 22, 2026
பசில் ராஜபக்சவை இன்டர்போல் கைதுசெய்யுமா?
செய்திகள்

பசில் ராஜபக்சவை இன்டர்போல் கைதுசெய்யுமா?

June 22, 2026
89 நிறுவனங்கள் மூலம் மில்லியன் டொலர் மோசடி; நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிரடி கைது!
செய்திகள்

89 நிறுவனங்கள் மூலம் மில்லியன் டொலர் மோசடி; நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிரடி கைது!

June 22, 2026
வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு துரோகம் இழைத்த தமிழரசுக்கட்சி; சுகாஸ் குற்றச்சாட்டு!
செய்திகள்

வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு துரோகம் இழைத்த தமிழரசுக்கட்சி; சுகாஸ் குற்றச்சாட்டு!

June 22, 2026
ஏறாவூர் வட்டாரத்தில் ஒரு கோடி ரூபா நிதியில் சிறுவர் பூங்கா
செய்திகள்

ஏறாவூர் வட்டாரத்தில் ஒரு கோடி ரூபா நிதியில் சிறுவர் பூங்கா

June 22, 2026
Next Post
மீண்டும் ஆசியாவின் சில பகுதிகளில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று

மீண்டும் ஆசியாவின் சில பகுதிகளில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு