நாட்டில் மீண்டும் கோவிட் தொற்று பரவல் ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. நேற்றைய தினம்வெளியிட்ட அறிக்கையின்படி, நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை 4 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019 பிற்பகுதியில் சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்த கோவிட் தொற்று சர்வதேசம் முழுவதும் பரவியது. இலங்கையில் 2020 மார்ச் முதல் 6இலட்சத்து 72 ஆயிரத்து 143 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர். இதில், 16 ஆயிரத்து 800இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். எனினும், கட்டுப்பாடுகள் மற்றும் கோவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டமையைதொடர்ந்து தொற்றுப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இந்த நிலையிலேயே நாட்டில் மீண்டும் தொற்றுப்பரவ ஆரம்பித்துள்ளது. இதனிடையே, அண்மையில் யாழ்ப்பாணத்தில் கோவிட் தொற்றால் ஐவர் பாதிக்கப்பட்டனர். இதில் ஒருவர் உயிரிழந்தார். எனினும், இது குறித்து உத்தியோகபூர்வமாக அரசாங்கம் சார்பில் தகவல்களை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.