பெண் ஒருவரை தாக்கி, காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முசாம்மிலின் மகனை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முசாம்மிலின் மகனான மொஹமட் இசாம் ஜமால்தீன் தாக்கியமையினால் காயமடைந்த பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை காவல்நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
ஹெவ்லொக் குடியிருப்பு திட்டத்தில் வைத்து இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று முன்தினம் (29)அ திகாலை ஒரு மணியளவில் குறித்த சந்தேகநபர் ஹெவ்லொக் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான பெண் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் கொள்ளுபிட்டி மற்றும் கெப்பிட்டிபொல ஆகிய பகுதிகளில் உள்ள தமது வீட்டிலிருந்து தப்பி சென்றுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.