Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கைக்கு வந்தும் உறவினர்களிடம் கையளிக்கப்படாத சாந்தனின் உடல்!

இலங்கைக்கு வந்தும் உறவினர்களிடம் கையளிக்கப்படாத சாந்தனின் உடல்!

3 years ago
in செய்திகள்

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நிலையில் விடுதலை செய்யப்பட்டு உடல் நலக் குறைவால் இந்தியாவில் உயிரிழந்த சாந்தனின் உடலை உறவினர்களிடம் கையளிப்பதில் இழுபறி நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சாந்தனின் உடல் நேற்று காலை ( 01) சென்னையில் இருந்து விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

எனினும், இலங்கையில் வைத்து சாந்தனின் உடல் மீள் பிரேத பரிசோதனை செய்யும் பொருட்டு நீர்கொழும்பு வைத்தியசாலைக்குக் கொண்டுச் செல்லப்பட்டது.

இந்தநிலையில், சாந்தனின் உடல் வைக்கப்பட்டுள்ள பெட்டி நீதிபதியின் முன்னிலையிலேயே திறக்கப்பட வேண்டும் என்ற சட்டத்திற்கு அமைய அதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வைத்தியசாலைக்கு நீர்கொழும்பு நீதவான் இன்று காலை வரை (10.00 AM) சமூகமளிக்கவில்லை எனவும் அவர் வருகையின் பின்னரே பரிசோதனைகள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தற்போது சாந்தனின் உடலை கையளிப்பதில் இழுபறி நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இன்று மாலையளவில் பிரேத பரிசோதனைகள் முடிந்து சாந்தனின் உடல் கையளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனை தொடர்ந்து, சாந்தனின் உடல் யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் அங்கு மக்கள் அஞ்சலிக்கு வைப்பதற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன.

பிரேத பரிசோதனைகளின் ஏற்பட்ட தாமதம் காரணமாக சாந்தனின் இறுதிக் கிரியைகள் தொடர்பான விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

தொடர்புடையசெய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு
செய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

September 17, 2026
யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை மாநாட்டிற்காக ஒத்திவைப்பு!
செய்திகள்

யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை மாநாட்டிற்காக ஒத்திவைப்பு!

September 17, 2026
மன்னார் மருத்துவமனையில் தாதியர்களுடன் ‘செல்ஃபி’ எடுத்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க!
செய்திகள்

மன்னார் மருத்துவமனையில் தாதியர்களுடன் ‘செல்ஃபி’ எடுத்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க!

September 17, 2026
மட்டக்குளி விபத்து – கார் சாரதி 30ஆம் திகதி வரை விளக்கமறியலில்!
செய்திகள்

மட்டக்குளி விபத்து – கார் சாரதி 30ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

September 17, 2026
டிட்வா சூறாவளி பாதிப்பு; வீட்டு வாடகைக் கொடுப்பனவு 2026 டிசம்பர் வரை நீடிப்பு
செய்திகள்

டிட்வா சூறாவளி பாதிப்பு; வீட்டு வாடகைக் கொடுப்பனவு 2026 டிசம்பர் வரை நீடிப்பு

September 17, 2026
நாராஹென்பிட RMV வளாகத்தில் தரகர் மாஃபியா ஒழிப்பு; பொலிஸார் அதிரடி நடவடிக்கை!
செய்திகள்

நாராஹென்பிட RMV வளாகத்தில் தரகர் மாஃபியா ஒழிப்பு; பொலிஸார் அதிரடி நடவடிக்கை!

September 17, 2026
Next Post
மகனை நாய்க் கூண்டில் அடைத்து சித்ரவதை செய்த தாய்!

மகனை நாய்க் கூண்டில் அடைத்து சித்ரவதை செய்த தாய்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு