Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாக்கு நீரிணையை நீந்தத் தயாராகும் மட்டக்களப்பு இளைஞன் மதுஷிகன்!

பாக்கு நீரிணையை நீந்தத் தயாராகும் மட்டக்களப்பு இளைஞன் மதுஷிகன்!

3 years ago
in மட்டு செய்திகள்

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி பழைய மாணவரும் ஜனாதிபதி விருது பெற்ற சிரேஷ்ட சாரணருமான தவேந்திரன் மதுஷிகன் அடுத்த வாரம் மே மாதம் 4ஆம் திகதி பாக்கு நீரிணையை நீந்திச் சாதனை படைக்கவுள்ளார்.

இதற்காக இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து அதிகாலை ஒரு மணிக்கு தனது நீச்சல் பயணத்தை ஆரம்பித்து பாக்கு நீரிணையைக் நீந்தி இலங்கையின் தலைமன்னாரை வந்தடையவுள்ளார். இவர் தனது சாதனை நீச்சல் பயணத்தில் 30கிலோ மீற்றர் தூரமுடைய நீரிணையை சுமார் 10 மணித்தியாலங்களில் நீந்திக் கரை சேருவதற்கு எதிர்பார்க்கிறார்.

மதுஷிகன் தனது சாதனைக்கான முன்னாயத்தமாக கல்கிஸை கடற்கரையில் 20 கிலோ மீற்றர் தூரம் வரை நீந்தியுள்ளார். தற்போது 20 வயதான மதுஷிகன், மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் பன்னிரண்டு வயதில் தனது நீச்சல் பயிற்சியை ஆரம்பித்து மாகாண மற்றும் திறந்த மட்ட நீச்சல் போட்டிகளில் பங்கேற்று வெற்றியீட்டியுள்ளார்.

இதுவரை நீச்சல் திறமைக்காக 12 பதக்கங்களை வென்றெடுத்துள்ள மதுஷிகன் கல்வி பொதுத் தராதர உயர் தரத்தில் கணித துறையில் தமது பாடசாலைக் கல்வியை கற்றதுடன்; இலங்கை சாரணியப் படையில் இணைந்து தமது ஆற்றல்களை வெளிப்படுத்தி வந்துள்ளார்.

தவேந்திரன் மதுஷிகன் தனது நீச்சல் திறமையினை சாதனையாக மாற்றுவதற்கு பாடசாலையின் பழைய மாணவர்கள், கடல் சார் செயற்பாடுகளில் ஈடுபடும் ஒஷியன் பயோம் என்ற அமைப்பு மற்றும் தனது பெற்றோர்களான தந்தை தங்கையா தவேந்திரன், தாய் அகல்யா ரோஷினி ஆகியோர் ஊக்குவிப்பதாக நினைவு கூர்ந்தார்.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி

September 4, 2026
புலமைப்பரிசில் பரீட்சையில் மிக்கேல் கல்லூரிக்கு பெருமை சேர்த்த அகர்வின்
செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சையில் மிக்கேல் கல்லூரிக்கு பெருமை சேர்த்த அகர்வின்

September 4, 2026
மட்டு கிரான் குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி கவிழ்ந்த விபத்தில் இரு மீனவர்கள் உயிரிழப்பு ஒருவர் உயிருடன் மீட்பு
செய்திகள்

மட்டு கிரான் குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி கவிழ்ந்த விபத்தில் இரு மீனவர்கள் உயிரிழப்பு ஒருவர் உயிருடன் மீட்பு

September 4, 2026
செங்கலடி பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுப்பு
காணொளிகள்

செங்கலடி பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுப்பு

September 4, 2026
மட்டு வெல்லாவெளியில் பாம்பின் விஷம் பட்ட நாவல் பழத்தை உண்ட 11 வயது சிறுவன் உயிரிழப்பு!
செய்திகள்

மட்டு வெல்லாவெளியில் பாம்பின் விஷம் பட்ட நாவல் பழத்தை உண்ட 11 வயது சிறுவன் உயிரிழப்பு!

September 4, 2026
ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் நிறைவு விழாவும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்
செய்திகள்

ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் நிறைவு விழாவும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்

September 3, 2026
Next Post
கொரோனா நோய்த்தாக்கம் தொடர்பில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரியின் அறிவித்தல்!

கொரோனா நோய்த்தாக்கம் தொடர்பில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரியின் அறிவித்தல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு