மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் நேற்று (03) பல்சர் 150 ரக மோட்டார் சைக்கிள் ஒன்று திருட்டு போயுள்ளது.
மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற நபர் cctv காணொளிகளில் பதிவாகியுள்ளதுடன், அவரை தேடும் பணியில் காத்தான்குடி பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பில் காத்தான்குடி வணிகர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், அவர் மோட்டார் சைக்கிளுடன் வரும் பொது தான் பார்த்ததாகவும் ஆனால் திருடிக்கொண்டுதான் வருகிறார் என்று எங்களுக்கு தெரியாது என்றும் தெரிவித்த அவர், குறித்த திருடன் வெளியூரை சேர்ந்தவரை போல் காணப்பட்டதாகவும் தெரிவித்தார்.