கொழும்பிலுள்ள ஒரு பிரபலமான பெண்கள் பாடசாலைக்கு அருகே கடந்த (1) கடத்தல் முயற்சி ஒன்று இடம்பெற்றதாக புகார் அளிக்கப்பட்டது,
பொலிஸாரின் கூற்றுப்படி, தாய் தனது வாகனத்தில் தனது மகளை பாடசாலையிலிருந்து அழைத்துச் செல்ல வந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
அடையாளம் தெரியாத ஒரு நபர் வாகனம் நிறுத்தப்பட்டிருந்தபோது உள்ளே நுழைந்து, சிறுமி அமர்ந்திருந்த பின் இருக்கையில் ஏறிக் கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் சந்தேக நபர் தாயிடம் வாகனத்தை முன்னோக்கி ஓட்டுமாறு கூறியுள்ளார்.

அந்தப் பெண் மறுத்து, தனது மகளை சந்தேக நபரிடமிருந்து விலக்கி, உதவி கேட்டு கத்தியபடி வாகனத்தை விட்டு வெளியேறிய நிலையில், குறித்த சந்தேக நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து பொலிஸாரால் பரிசோதிக்கப்பட்ட சி.சி.ரி.வி கெமரா காட்சிகள் ஏப்ரல் 29 மற்றும் 30 ஆகிய திகதிகளில் பாடசாலைக்கு அருகில் அதே நபர் சுற்றித் திரிவதைக் காட்டுகின்றன.
இதையடுத்து பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில், தகவல் தெரிந்தவர்கள் 011-2695411 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.