இன்று மட்டக்களப்பு புவிசரிதவியல் திணைக்களத்திற்கு முன்பாக கனிம அகழ்வு சங்கத்தினரால் கண்டன போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கடந்த ஒரு வருடகாலமாக கனிய அகழ்வுக்கான ( மண்) அனுமதி பத்திரங்கள் அரசியல் செல்வாக்கு படைத்த நபர்கருக்கு மட்டுமே வழங்கப்பட்டு மீதமுள்ள கனிய அகழ்வாளர்களின் அனுமதிப்பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அங்கிருந்த போராட்டக்காரர்களில் ஒருவர் எமது Battinaatham ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கையில், மீன்பிடி தெரிந்தவர் மீன் பிடிக்க போவார். மேசன் வேலை தெரிந்தவர் மேசன் வேலைக்கு போவார். நாம் இந்த தொழிலையே நம்பி வாழ்பவர்கள், இதனை தவிர்த்து எமக்கு வேறு தொழில்கள் எதுவும் தெரியாது. இந்நிலையில் எமக்கான அனுமதி பத்திரத்தினை ரத்து செய்தால் எம்மால் எப்படி வாழ முடியும்? கவலை தெரிவித்தார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், பிரதேச செயலகத்தினால் அனுமதி கிடைத்துள்ள போதிலும் புவிசரிதவியல் திணைக்களம் அதற்கான அனுமதியை மறுத்துள்ளதாகவும் கூறினார். மேலும் புவிசரிதவியல் திணைக்களத்திலிருந்து மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரை பேரணியாக வந்து மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் சில கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரால் இன்னும் ஒரு வார காலத்திற்குள் உங்களுக்கான தீர்வு வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.