சாய்ந்தமருது ஒக்ஸ்போர்ட் கல்லூரியின் 29 ஆண்டு நிறைவு விழாவும், மாணவர்கள் விடுகை மற்றும் கௌரவிப்பு நிகழ்வும், கல்லூரி பணிப்பாளர் எஸ். ஜமால்தீன் தலைமையில் சாய்ந்தமருது அல்- ஹிலால் வித்தியாலய கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கின் கேடயம் பிரதானியும், கிழக்கு மாகாண அனைத்துப்பள்ளிவாசல்கள் பொதுநிறுவனங்கள் சம்மேளன நிறைவேற்று குழு உறுப்பினருமான எஸ்.எம். சபீஸ் கலந்துகொண்டு பிள்ளைகளை வளர்ப்பதில் பெற்றோர்களின் வகிபாகம், சமூகத்தை நேசிக்கும் தலைவர்கள் இல்லாமல் போனமையால் சமூகம் அடைந்துள்ள துயரங்கள், எதிர்காலத்தில் பிள்ளைகளை சிறந்த தலைவர்களாக உருவாக்க பெற்றோர்கள் செய்யவேண்டிய பணிகள், எதிர்காலம் மீது உள்ள சவால்கள் தொடர்பில் கருத்துரைத்தார்.
மேலும் இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு பணிப்பாளரும், அல்- மீஸான் பௌண்டஷன்-ஸ்ரீலங்காவின் தவிசாளருமான யூ.எல்.என். ஹுதா உமர், சாய்ந்தமருது பிரதேச முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி வை. திருப்பதி, கல்முனை உப பிரதேச செயலக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம். ஆயிஷா, அட்டாளைசேனை தேசிய கல்வியல் கல்லூரி விரிவுரையாளர் ஏ.எம். முபாரக், சியபத பைனான்ஸ் பிராந்திய முகாமையாளர் எம்.எச்.எம். பாரீஹ் உட்பட அதிதிகள், பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது மாணவர்களின் கலை, கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் மாணவர்களை பாராட்டி அதிதிகளினால் மாணவர்களுக்கு சான்றிதழ், நினைவு சின்னங்கள், பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.