கிளிநொச்சி வாக்களிப்பு நிலையத்திற்கு வருகை தரும் மக்களை அச்சுறுத்தும் வகையில் வாள்களுடன் சுற்றித் திரிந்த சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கோணாவில் பகுதியில் உள்ளூராட்சி தேர்தல் வாக்களிப்பு நிலையத்திற்கு அருகில் பாரிய கூரிய வாள்களுடன் வாகனத்தில் சுற்றித்திரிந்த நபர்களே இவ்வாறு கைது செய்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்ட தேர்தல் திணைக்களத்துக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து பொலீஸார் விரைந்து செயல்பட்டதையடுத்து, வாகனத்தை பரிசோதனை மேற்கொண்ட போது வாகனத்துக்குள் இரண்டு வாள்களுடன் இருந்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அத்தோடு வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.