இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் திருத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இதன்படி, 92 ரக பெற்றோல், மற்றும் டீசலின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

இதேவேளை, 95 ரக பெற்றோல் 9 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலையாக 447 ரூபா குறிப்பிடப்பட்டுள்ளது.
சூப்பர் டீசலின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 458 ரூபாவாகும்.
மண்ணெண்ணெயின் விலை லீற்றருக்கு 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 257 ரூபாவாகும்.