ஓல்லாந்தர் காலத்திற்கு முற்பட்ட வரலாற்றைக் கொண்ட மட்டக்களப்பு, கோட்டைக்கல்லாறு அருள்மிகு ஸ்ரீ கந்தாசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவத்திருவிழா 18.03.2024 அன்று ஆரம்பமாகிறது.
இவ்வாறு ஆரம்பமாகும் திருவிழா ஆரம்பம், முடிவு உட்பட 09 நாட்கள் நடைபெறும் என்பதுடன்,23.03.2024 சனிக்கிழமை காலை 6.00 மணிக்கு பாற்குடப் பவனியும் இடம்பெறவுள்ளது.
கோட்டைக்கல்லாறு சித்திவிநாயகர் ஆலயத்திலிருந்து ஆர்ப்பமாகும் இந்த பாற்குடப் பவனி ஸ்ரீ கந்தசுவாமி தேவஸ்தானத்தை வந்தடையும் அதேநேரம் காலை 8.00 மணிக்கு 108 சங்காபிஷேக பூசையும் இடம்பெறும்.
அதேசமயம் பிரதம குருக்களாக சிவஸ்ரீ.ரஞ்சீந்திரன் குருக்கள், சிவஸ்ரீ. பத்மலோஜ ஈசான சிவம் குருக்கள் மற்றும் உதவி குருவான சிவஸ்ரீ கலைவாணன் சர்மா ஆகியோரினால் ஆலயபூசைகள் இடம்பெறும் என்பதுடன்,24.03.2024 அன்று ஆலய திருவிழாவின் வருடாந்த சடங்கு உற்சவம் இனிதே நிறைவடையும் என ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.