அரசாங்கத்தின் அடக்கு முறைகளுக்கு எதிராக நாளை திங்கட்கிழமை மாபெரும் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டா லின் தெரிவித்துள்ளார்.நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், “மே தினக்கூட்டத்தின் பேரணியானது மதியம் ஒருமணியளவில் கோட்டை புகையிரத நிலையம் அருகில் இருந்து ஆரம்ப மாகவுள்ளது. மே தினக் கூட்டத்தில் மக்கள் முகம் கொடுத்துள்ள பிரச்னைகள் மற்றும் மக்களின் கோரிக்கைகள் முன்வைக்கப்படவுள்ளன.ரணில் தலைமையிலான அரசாங்கம் மக்களின் ஆணை இல்லாமலே செயல் படுகிறது. ரணில், ராஜபக்ஷ அரசாங்கம் சர் வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுடன் செயல்படுகிறது.
அவ்வாறு செயல்பட் டால் அவை மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டையேதோற்றுவிக்கும்.நாட்டில்அரசாங்கத்தின் முறையற்ற செயல்பாடுகளை வெளியில் கொண்டு வருவதில் தொழில்சங்கங்கள் முன் நின்று செயல்படுவதனா லேயே பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைக் கொண்டுவருவதற்கு அரசு முயற்சிக் கின்றது.” – என்றார்.