சிறு போகத்தில் உரக் கொள்வனவிற்காக ஒரு ஹெக்டெயருக்கு 20 ஆயிரம் ரூபா வழங்கவுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்துள்ளார். மே மாத ஆரம்பம் முதல் விவசாயிகளுக்கு இதற்கான நிதியுதவி வழங்கப்படவுள்ளது.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், “நாம் சிறுபோகத்தை முன்னெடுக்கும் விவசாயிகளின் முழுமையான பட்டியலை எடுத்துள்ளோம்.
அந்தப் பட்டியலின் அடிப்படையில், விவசாயிகளின் கணக்கு இலக்கங்களை நாம் பெற்றுக்கொண்டுள்ளோம். அவர்களது கணக்கு இலக்கங்களுக்கு பணத்தினை வைப்பிலிட நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இம்மாதம் முதல் வாரத்திலிருந்து சிறுபோகம் முன்னெடுக்கப்படும் பிரதேசங்களுக்கு அமைய, முன்னுரிமையளித்து சிறுபோக நெற்செய்கையில் ஈடுபடும் அனைத்து விவசாயிகளுக்கும் ஒரு ஹெக்டெயருக்கு 20 ஆயிரம் ரூபா என்ற அடிப்படையில், அதிகபட்சமாக இரண்டு ஹெக்டெயருக்கு 40 ஆயிரம் ரூபா என காணியின் அளவுக்கு அமைய கொடுப்பனவுகளை வழங்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.