வவுனியா – வெடுக்குநாறி மலை ஆதிசிவனார் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் விடுவிக்கக்கோரியும் காவல்துறையினரின் அராஜகத்தை கண்டித்தும் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டமானது தற்போது நெடுங்கேணி காவல் நிலையத்தை அடைந்துள்ளது.
நெடுங்கேணி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தற்போது, மக்கள் காவல்துறையினருக்கு எதிராக தமது ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் காவல் துறை உயர் அதிகாரிகள் மக்களிடத்தில் உரையாட வருகைதந்தபோதும் அதை புறக்கணித்த மக்கள் அவர்களுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
இதன் காரணமாக விசேட அதிரடிப்படியினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.