Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அம்பாறையில் தனது இரு பிள்ளைகளையும் கொலை செய்த தந்தை; பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலம்!

அம்பாறையில் தனது இரு பிள்ளைகளையும் கொலை செய்த தந்தை; பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலம்!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அம்பாறையில் தனது இரு பிள்ளைகளை கொலை செய்துவிட்டு தந்தையொருவர் உயிர்மாய்ப்பதற்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் நேற்றையதினம்(14) காலை இடம்பெற்றிருந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

மன நலம் பாதிக்கப்பட்ட தனது இரு பிள்ளைகளையும் பராமரித்து வந்த மனைவி, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புற்றுநோய் காரணமாக மரணமடைந்த நிலையில், மனைவியின் இழப்பு தன்னை வெகுவாக பாதித்திருந்ததாகவும் இதனால் எனது பிள்ளைகளை பராமரிப்பதற்கு சிரமமாக இருந்த காரணத்தினால் தான் இவ்வாறு செயற்பட்டதாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு தற்போது கல்முனை ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வரும் உயிரிழந்த பிள்ளைகளின் தந்தை தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருக்கின்றார்.

அம்பாறை பெரிய நீலாவணை முஸ்லீம் பிரிவு மருதமுனை அல்பாக்கியாதுஸ் ஸாலிஹாத் ஜும்மா வீதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்றையதினம்(14) காலை 8 மணியளவில் குறித்த இரட்டை கொலை இடம்பெற்றுள்ளது.

அதன் பின்னர் சம்பவ வீட்டிற்கு உடனடியாக வந்த சகோதர சகோதரிகள் அங்கு கண்ட காட்சியை கண்டு அபயக்குரல் எழுப்பியதுடன் கத்தியோடு கொலை செய்து காணப்பட்ட தனது சகோதரனை அருகில் உள்ள கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு பொதுமக்களின் உதவியுடன் அழைத்து சென்றனர்.

பின்னர் சம்பவ இடத்தில் இரத்த வெள்ளத்துடன் காணப்பட்ட முஹம்மது கலீல் முகம்மது றிகாஸ்(வயது-29) முஹம்மது கலீல் பாத்திமா பஸ்மியா(வயது-15) ஆகியோரின் நிலை கண்டு அவ்விடத்தில் வந்திருந்த உறவினர்கள் மக்கள் தங்களை அறியாமல் இந்த நோன்பு(ரமழான்) மாதத்தில் இவ்வாறு நடந்து விட்டதே என கதறி அழுது பெரிய நீலாவணை பொலிஸாருக்கு அறிவித்தனர்

சம்பவம் தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க வழிநடத்தலில் பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் சடலங்கள் காணப்பட்ட வீட்டிற்கு உரிய பாதுகாப்பினை வழங்கினர்.

தடயவியல் பொலிஸாரும் மோப்ப நாய் பிரிவினரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டதை அவதானிக்க முடிந்தது.

பின்னர் கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் அங்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டு இறுதியாக பிரேத பரிசோதனைக்காக அம்பாறை பொது வைத்தியசாலை அனுப்பி வைக்கப்பட்டதுடன் நேற்றிரவு இரவு இரு பிள்ளைகளின் சடலங்களும் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை உயிரிழந்த இரு பிள்ளைகளின் சடலங்களும் இன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ள நிலையில் வெளிநாட்டில் இருந்து இரு சகோதரர்களின் வருகைக்காக காத்திருப்பதாக உறவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரு பிள்ளைகளையும் கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற தந்தை; பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் சம்பவம்!

தொடர்புடையசெய்திகள்

13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!
செய்திகள்

13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!

September 16, 2026
நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!
செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

September 16, 2026
கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!

September 16, 2026
போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை
செய்திகள்

போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை

September 16, 2026
ரயில் தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு – இன்றிரவு 6 ரயில் சேவைகளுக்கு பாதிப்பு!
செய்திகள்

ரயில் தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு – இன்றிரவு 6 ரயில் சேவைகளுக்கு பாதிப்பு!

September 16, 2026
“புத்துயிர்க்கும் புதுநகரம்” தொனிப்பொருளில் வாகரையில் மரநடுகை
செய்திகள்

“புத்துயிர்க்கும் புதுநகரம்” தொனிப்பொருளில் வாகரையில் மரநடுகை

September 16, 2026
Next Post
மட்டு கொக்கட்டிச்சோலையில் 8 மாத கர்ப்பிணி பெண்ணின் சடலம் மீட்பு!

மட்டு கொக்கட்டிச்சோலையில் 8 மாத கர்ப்பிணி பெண்ணின் சடலம் மீட்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.