குடியிருப்பு கனிஷ்ட வித்தியாலயத்தில் சிறுவர் விளையாட்டு விழா பாடசாலை அதிபர் வி.கிருபைராசா தலைமையில் குடியிருப்பு காளி கோயில் வளாகத்தில் (16) திகதி இடம் பெற்றது.
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் கலந்து சிறப்பித்தார்.
இந் நிகழ்வில் தேசிய கொடியேற்றி தேசிய கீதம் இசைத்து விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியது.
மாணவர்களின் உடல் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இப் போட்டிகளினால் வெற்றி தொல்வியினை ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கை வளர்த்துக் கொள்வதற்கான களமாக இப் போட்டிகள் இடம் பெறுவதுடன், 267 மாணவர்கள் கல்வி கற்கும் இப் பாடசாலையில் நான்கு வருடங்களிற்கு பின்னர் இம் முறை பாடசாலையின் விளையாட்டு போட்டி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
வினோத உடைப்போட்டி, ஓட்டப்போட்டி, தடை தாண்டல் ஓட்டப் போட்டி, பந்து சேகரித்தல், பலுன் ஊதி உடைக்கும் போட்டி ஆசிரியர்களுக்கான போட்டிகள், பழைய மாணவர்களுக்கான போட்டிகள் என பல இடம் பெற்றது.
இந் நிகழ்வில் வெற்றி பெற்ற இல்லங்களுக்கும் மற்றும் மாணவர்களுக்கு இதன் போது அதிதிகளினால் விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வின் விசேட அதிதிகளாக உதவி கல்விப் பணிப்பாளர் திருமதி யூ.விவேகானந்தம் மற்றும் கோட்டக் கல்வி பணிப்பளர் ரீ.ராஜமோகன் மற்றும் உயர் அதிகாரிகள், ஆரம்ப கல்வி பிரிவின் வளவாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.