இன்று மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது.பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் கைத்துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் பொலிஸ் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று (03) இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு வீதி ரோந்து கடமைக்காக கைத்துப்பாக்கி வழங்கப்பட்டிருந்தது. சம்பவதினமான இன்று அதிகாலை 3 மணிக்கு கடமையை முடித்துக்கொண்டு அந்த கைத்துப்பாக்கியை ஆயுத களஞ்சி பொறுப்பாளரிடம் வழங்க முற்பட்டபோது தவறுதலாக கைத்துப்பாக்கி வெடித்துள்ளது.
களஞ்சி பொறுப்பாளரான பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் காலில் துப்பாக்கி வெடித்து சூடு ஏற்பட்டதையடுத்து, படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.