விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலியவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தினால் வழங்கப்பட்ட வேன் பயன்படுத்தப்பட்டதாக எழுந்த முறைப்பாடு தொடர்பில் இரகசிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தினால் வேன் நன்கொடையாக வழங்கப்பட்ட இந்த வேன்களில் குழந்தைகளை தவிர கைதிகளை ஏற்றி சொல்ல கூடாது மற்றும் வாகனத்தை சிறை நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த கூடாது என அறிவித்திருந்தது.
சிறை ஆணையாளரும் இந்த நிபந்தனையை மீறியுள்ளதாகவும், கெஹலிய ரம்புக்வெல்ல இந்த வேனில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டமை தொடர்பில் பொலிஸாரும் தனது விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.