இலங்கையில் 12 வீதமான முதியோர் தமது அனைத்து பற்களையும் இழந்துள்ளதாக சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார்.
உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, பல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை பாடசாலை மட்டத்தில் கற்பிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், வாழ்நாள் முழுவதும் வாய் மற்றும் பல் ஆரோக்கியத்தை சரியாக பேணுவது முக்கியம் என்று குறிப்பிட்ட நிலையில், நாட்டில் தற்போது ஏராளமானோர் வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற நோய்களைத் தடுக்க சரியான சுகாதாரப் பழக்கங்களைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.