வட மாகாணத்தில் கடந்த ஆண்டு 52 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 129 பேர் இது வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாவும், அவர்களில் 38 பேர் நீதிமன்றங்கள் ஊடாக பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்தியத்திற்கு உட்பட பகுதிகளில் 14 கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 44 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முற்படுத்தப்பட்ட நிலையில் , 11 சந்தேகநபர்கள் நீதிமன்றம் மூலம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் தொடர்ந்தும் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 05 கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 09 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முற்படுத்தப்பட்ட நிலையில், 05 சந்தேகநபர்கள் நீதிமன்றம் மூலம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் தொடர்ந்தும் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் பொலிஸ் பிராந்தியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 04 கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முற்படுத்தப்பட்ட நிலையில், 06 சந்தேகநபர்கள் நீதிமன்றம் மூலம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் தொடர்ந்தும் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா பொலிஸ் பிராந்தியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 08 கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 17 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முற்படுத்தப்பட்ட நிலையில், 04 சந்தேகநபர்கள் நீதிமன்றம் மூலம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் தொடர்ந்தும் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு பொலிஸ் பிராந்தியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 08 கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முற்படுத்தப்பட்ட நிலையில், 07 சந்தேகநபர்கள் நீதிமன்றம் மூலம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் தொடர்ந்தும் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி பொலிஸ் பிராந்தியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 13 கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 37 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முற்படுத்தப்பட்ட நிலையில், 05 சந்தேகநபர்கள் நீதிமன்றம் மூலம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் தொடர்ந்தும் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.