“முள்ளில் மலர்ந்த மரியின் கனா” பாஸ்கா நாடகம் அமிர்தகழி, பாலமீன்மடு பங்கு இளைஞர்கள் மற்றும் சிறுவர்களால், பாலமீன்மடு குழந்தை இயேசு ஆலயத்தின் முன்பாக உள்ள தண்ணீர் கிணற்றடி வளாகத்திற்குள் மேடை அமைக்கப்பட்டு நிகழ்த்தப்பட்டது.
அருட்தந்தை மெருஷன் ஹென்றிக் அடிகளாரின் தலைமையில் இடம்பெற்ற இந்த திருப்பாடுகளின் காட்சி நிகழ்வு பங்கு மக்களின் பங்களிப்புடனும் பாலமீன்மடு கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தினரின் வழிநடத்தலுடன் இடம்பெற்றது.

இவ் நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் பங்கு மக்கள் என்போர் கலந்து கொண்டிருந்தனர்.
மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான இந்த நிகழ்வில், பாலமீன்மடு கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தினர் பங்குத்தந்தையை பாராட்டி பொன்னாடை அணிவித்து கொளரவித்தனர்.

இந்த நிகழ்வின் இறுதியில் முன்னைநாள் பங்குத்தந்தை, அருட்தந்தை C.V அன்னாதாஸ் அடிகளாரினால் இறுதி வாழ்த்து தெரிவிக்கப்பட்டு அதன் பின்னர் பாலமீன்மடு கத்தோலிக்க இளைஞர் ஒன்றிய தலைவர் அவர்களால் நன்றி உரை வழங்கப்பட்டது.
அதேசமயம் இந்த பங்கு மக்களால் பாஸ்கா நாடக நிகழ்வு நடாத்தப்பட்டது இதுவே முதல் தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது.











