இந்தியா பெங்களூருவில் பைக் சர்வீஸ் சென்டரில் “ஏர் பிரஷர் பைப்” மூலம் ஆசனவாயில் காற்று பிடித்த சம்பவத்தில், இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
கர்நாடக மாநில விஜயபுரா மாவட்டத்தை சேர்ந்தவர் யோகேஷ் (28 வயது ) என்னும் நபர் பெங்களூருவில் தங்கி டெலிவரி ஏஜென்ட் ஆக பணிபுரிந்து வருகிறார்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/03/image-936-1024x575.png)
யோகேஷ் தன்னுடைய இருசக்கர வாகனத்தை சர்வீஸ் செய்வதற்காக பெங்களூரு சம்பிகேஹள்ளி பகுதியில் உள்ள தனியார் பைக் சர்வீஸ் சென்டரில் பைக்கை சர்வீஸ்க்கு விட்டுள்ளார். அந்த சர்வீஸ் சென்டரில் யோகேஷ் நண்பன் முரளி என்ற இளைஞர் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்தநிலையில், நண்பர்கள் இருவரும் குறும்புத் தனம் செய்வதில், ஈடுபட்டுள்ளனர். அப்போது சர்வீஸ் சென்டரில் இருந்த “ஏர் பிரஷர் பைப்பை” எடுத்து இருவரும் விளையாடத் தொடங்கியுள்ளனர்.
இதில் முரளி அந்த “ஏர் பைப்பை” வைத்து முதலில் யோகேஷ் முகம் மற்றும் வயிற்றுப் பகுதியில் காற்று விட்டு விளையாடி , ஒருகட்டத்தில் ஆசனவாயில் “ஏர் பிரசர் பைப்” மூலமாகக் காற்று பிடித்துள்ளார்.
இதில் ஆசன வாய் மூலமாகக் காற்று உள்ளே சென்று, யோகேஷ் வயிறு பெரிதாக மாறி, குடல் வெடித்து நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.
இதனையடுத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த யோகேஷை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே யோகேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், முரளியைக் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/03/image-935.png)
விளையாட்டாகச் செய்த சம்பவம், விபரீதமாக மாறி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேசமயம் இதே போலான சம்பவம் ஒன்றும் தென்னிலங்கை பகுதியில் பதிவாகியுள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
தென்னிலங்கை தனியார் நிறுவனமொன்றின் பழுதுபார்ப்பு பிரிவில் பணிபுரியும் ஊழியர் ஒருவரின் ஆசனவாயில் விளையாட்டாக காற்று நிரப்பும் இயந்திரக் குழாயை செருகி காற்று நிரப்பியதால், அவர் குடல் வெடித்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் நிறுவனத்தில் பணியாற்றிய பாணந்துறை அலுபோமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த தேஷான் மதுஷங்க என்ற 24 வயதுடைய இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை (25ஆம் திகதி) பிற்பகல், அதே நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு ஊழியர்கள், உயிரிழந்த ஊழியரின் ஆசனவாயில் விளையாட்டாக காற்று நிரப்பும் இயந்திரத்தின் குழாயை பிடித்துள்ளனர்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/03/image-937-1024x682.png)
இதன்போது, குழாய் செருகுப்பட்டு, உடனடியாக அகற்ற முடியாமல் போனது. அத்துடன், அதிக அழுத்தத்தில் காற்று உட்செலுத்தப்பட்டதால் குடல் வெடித்து ஊழியர் உயிரிழந்தார்.
இந்நிலையில் உயிரிழந்த ஊழியரின் பிரேத பரிசோதனை நேற்று (29ம் திகதி) ராகம வைத்தியசாலையில் நடைபெறவிருந்தது. இந்நிலையில் சம்பவம் தொடர்புடைய இரு தொழிலாளர்களை சப்புகஸ்கந்த பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரிய தொழிலாளர்கள் இருவரும் திஸ்ஸமஹாராமய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.