பஞ்சாபின் பாட்டியாலாவில், ஆன்லைனில் பிறந்தநாள் கேக் ஆர்டர் செய்து சாப்பிட்டதால் 10 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மான்வி என்ற அந்த சிறுமி மார்ச் 24, 2024 அன்று தனது குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடினார்.
அப்போது, ஆன்லைன் உணவு டெலிவரி தளம் மூலம் வரவழைக்கப்பட்ட கேக்கை குடும்பத்தினர் வெட்டி உண்டனர்
சிறுமியின் தாத்தா கூற்றுப்படி, அன்றிரவு கேக் சாப்பிட்ட மான்வி மற்றும் குடும்பத்தினர் சிலர் உடல்நலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டனர் என்பது தெரியவந்துள்ளது.
மறுநாள் காலை மான்வியின் நிலை மோசமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறுமி மான்வி உயிரிழந்தார்.
கேக் தயாரித்த “கேக் கண்ணா”(Cake Kanha) என்ற பேக்கரியில் கேக்கில் தீமைக்கான பொருட்கள் இருந்திருக்கலாம் என்று குடும்பத்தினர் சந்தேகிக்கின்றனர்.
எனவே பேக்கரி உரிமையாளர் மீது எஃப்.ஐ.ஆர் (FIR) புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இறப்புக்கான உண்மையான காரணம் மற்றும் கேக்கின் தோற்றம் ஆகியவற்றைக் கண்டறிய விசாரணை நடந்து வருகிறது.
ஆனால் கேக் வழங்கியதாக கூறப்படும் பேக்கரி இதில் தொடர்பு இல்லை என்று மறுத்துள்ளது. சுகாதார அதிகாரிகள் கேக் மாதிரிகளை பரிசோதித்து வருகின்றனர்.