Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவரின் மகளை தேடுகிறது அரசாங்கம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவரின் மகளை தேடுகிறது அரசாங்கம்!

3 years ago
in முக்கிய செய்திகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி மற்றும் மகள் எங்கே என்பது குறித்து இதுவரையில் தெரியவில்லை, காணாமல்போனோர் பட்டியலில் தான் அவர்கள் உள்ளனர் என ஓய்வுபெற்ற இந்திய இராணுவ அதிகாரி, புவி அரசியல் ஆய்வாளர் மேஜர் மதன்குமார் தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகாவை தேடி இலங்கை உளவுத்துறையில் முக்கியமான அதிகாரி தலைமையில் ஒரு தேடுதல் நடவடிக்கை இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுவதாக முக்கிய பத்திரிகையொன்றில் வெளியாகியிருந்த கட்டுரை தொடர்பில் வினவப்பட்ட போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேஜர் மதன்குமார் மேலும் கூறுகையில், விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருப்பதாக நெடுமாறன் ஒரு விடயத்தை முன்வைத்தார்.

இந்த நிலையில் இலங்கை இராணுவத்தில் பிரிகேடியர் தரத்திலுள்ள அதிகாரியொருவர், “பிரபாகரன் கொல்லப்பட்டார் அதை பொட்டம்மான் மற்றும் கருணா உறுதி செய்தனர். மரபணு பரிசோதனையையும் நாம் எடுத்துள்ளோம். அந்த பரிசோதனையில் உயிரிழந்தது பிரபாகரன் தான் என உறுதி செய்யப்பட்டது” என நெடுமாறனின் அறிவிப்பிற்கு மறுப்பு செய்தியொன்றை விடுத்திருந்தார்.

ஆனால் பிரபாகரனின் மூத்த மகன் சார்ள்ஸ் கொல்லப்பட்டது தெரியும், இளைய மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டது தெரியும், எனினும் அவரது மனைவி மற்றும் மகள் எங்கே என்பது இதுவரையில் தெரியவில்லை.

காணாமல்போனோர் பட்டியலில் தான் அவர்கள் உள்ளனர். எனவே அவர்கள் வாழ்வதற்கான சாத்தியம் இருக்கிறது. இப்படியான சூழலில் விடுதலைப் புலிகளுக்கு புத்துயிர் அளிப்பதற்கான சாத்தியம் இருப்பதாக ஏற்கனவே ஆராய்ந்துள்ளோம்.

இதற்கான சாத்தியம் இருக்கும் சந்தர்ப்பத்தில் இதனால் நேரடியாக பாதிக்கப்படுவதற்கு இலங்கையில் தற்போது ஆட்சியிலுள்ள அரசாங்கமே என சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், பிரபாகரனின் மகளை இலங்கை தேடுவதற்கு இன்னொரு நாட்டின் உளவுத்துறையின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் அச்சம்; உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு!
உலக செய்திகள்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் அச்சம்; உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு!

October 22, 2026
ஞானசார தேரரின் காவி ஆடை விவகாரம்; மனுக்கள் நவம்பர் 18ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!
செய்திகள்

ஞானசார தேரரின் காவி ஆடை விவகாரம்; மனுக்கள் நவம்பர் 18ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

October 22, 2026
மோட்டார் சைக்கிள் சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!
செய்திகள்

மோட்டார் சைக்கிள் சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

October 22, 2026
இன்று முதல் மின்வெட்டு இல்லை; தேசிய மின் கட்டமைப்பு இயக்குநர் அறிவிப்பு!
செய்திகள்

இன்று முதல் மின்வெட்டு இல்லை; தேசிய மின் கட்டமைப்பு இயக்குநர் அறிவிப்பு!

October 22, 2026
கிராண்ட்பாஸில் ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் பெண்  ஒருவர் கைது!
செய்திகள்

கிராண்ட்பாஸில் ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் பெண்  ஒருவர் கைது!

October 22, 2026
ஹட்டன் பன்மூர் குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
செய்திகள்

ஹட்டன் பன்மூர் குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

October 22, 2026
Next Post
அனுராதா யாஹம்பத்தை கிழக்கு மாகாண ஆளுநர் பதவியிலிருந்து நீக்க வேண்டாம்; சர்வ மத தலைவர்கள் கோரிக்கை!

அனுராதா யாஹம்பத்தை கிழக்கு மாகாண ஆளுநர் பதவியிலிருந்து நீக்க வேண்டாம்; சர்வ மத தலைவர்கள் கோரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு