பொருளாதார நெருக்கடியினால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இலங்கைப் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட வேகமாக மீட்சியடைந்ததன் காரணமாக நாட்டின் பொருளாதார எதிர்பார்ப்பை உலக வங்கி 50 வீதம் அடிப்படை புள்ளிகளால் அதிகரித்துள்ளது .
தெற்காசிய நாடுகளின் பொருளாதாரம் தொடர்பில் உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இவ்வருடம் இலங்கை 2.2 வீத சாதகமான பொருளாதார வளர்ச்சி வீதத்தை அடையும் என கணித்துள்ளது. மேலும் அடுத்த ஆண்டு 2.5 சதவீத வளர்ச்சி அளவை எட்டும் எனவும் எதிர்வு கூறியுள்ளதாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இலங்கை தனது உத்தியோகபூர்வ கையிருப்பு மேலும் அதிகரிக்கும் எனவும் வெளிநாட்டு தொழிலார்களின் பணம் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருமானமும் எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கும் எனவும் உலக வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட இலங்கையின் பொருளாதாரம் மீண்டு வர ஐ.எம்.எப். வழங்கிய உதவி கடன்தொகை பெரும் உதவியாக இருந்துள்ளதாகவும் உலக வங்கி தெரிவிக்கிறது .
மேலும், இலங்கையின் வறுமை வீதம் கடந்த ஆண்டு 26 சதவீதமாக பதிவாகி இருந்ததாகவும் ,
2026 ஆம் ஆண்டு இலங்கையின் வறுமை நிலை 22 வீத அளவில் இருக்கும் என உலக வங்கி தெரிவிக்கிறது .
கடந்த வருடத்தின் நான்காம் காலாண்டில், இலங்கை 4.5 சதவீத சாதகமான பொருளாதார வளர்ச்சி வீதத்தை எட்டியிருந்த போதிலும், ஒட்டுமொத்தமாக 2023ல் 2.3 சதவீத சாதகமான பொருளாதார வளர்ச்சி வீதத்தை எட்டியுள்ளது.