முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையை நினைவு கூரும் முகமாக வடக்கு, கிழக்கு முழுவதும் முள்ளி வாய்க்கால் கஞ்சி வழங்கப்படவுள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை வல்வெட்டித்துறையில் ஆரம்பமாகும் இந்த நிகழ்வு எதிர்வரும் 15ஆம்திகதி வரை வடக்கு, கிழக்கு முழுவதும் முன்னெடுக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்றுநடத்திய செய்தி யாளர் சந்திப்பிலேயே இந்த விடயம் தெரிவிக் கப்பட்டது.தமிழர் தாயகம் எங்கும் பயணித்துமுள்ளிவாய்கால் கஞ்சியை எமது உறவுகளுடன் பரிமாறி எமது இனம்இனவழிப்புக்கு உள்ளான வரலாற்றையும் வலிகளையும் எமது இளைய தலைமுறையினருக்கு கடத்தும் செயல்பாட்டை முன்னெடுக்கவுள்தாக பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்தனர். அத்துடன், நாம் முன்னெடுக்கும் இச்செயல்பாட்டில் அனைத்து தமிழ் மக்களும் எல்லா வேறுபாடுகளையும் துறந்து தமிழினமாக எம்முடன் இணையுமாறு அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம் – என்றனர்.
கஞ்சி விநியோகம் வல்வெட்டித்துறையில் இன்று கால முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் நிகழ்வு ஆரம்பமாகும். தொடர்ந்து, மருதனார்மடம் சந்தி, காரைநகர் இந்துக் கல்லூரி முன்பாக, யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக, சாவகச்சேரி பேருந்து நிலையம் முன்பாக முள்ளி வாய்க்கால் கஞ்சி விநியோகிக்கப்படும். நாளை புதன்கிழமை காலை கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்பாக,
புதுக்குடி யிருப்பு, முல்லைத்தீவு, மாங்குளத்தில் விநியோகிக்கப்படும். நாளை மறுதினம் வியாழக்கிழமை மன்னாரிலும் வவுனியாவிலும் கஞ்சிவிநியோ கிக்கப்படவுள்ளது. வெள்ளிக்கிழமை திருகோணமலை சிவன் கோவில், பத்திரகாளி அம்மன் கோவில், அன்பொளிபுரம், மூதூர் பகுதியிலும், மறு நாள் சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தின் கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் பங்கேற்புடன் வந்தாறுமூலை வளாகம் முன்பாகவும் செங்கலடி, ஆரை யம்பதி, மட்டக்களப்பு பிள்ளையார் கோவில் பகுதியிலும் அடுத்தநாள், ஞாயிற்றுக் கிழமை அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் மற்றும் பொத்துவில் கஞ்சி விநியோகிக்கப் படவுள்ளது. எதிர்வரும், 15ஆம் திகதி முதல் யாழ்ப்பாணத்தின் சகல பாடசாலை களிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்படும் என்றும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்தனர்.