இதுவரை இடைநிறுத்தப்பட்டிருந்த பரேட் சட்டம்( (Parate Law) இன்று (01) முதல் மீண்டும் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கியில் அடமானம் வைத்த சொத்தை ஒருவர் மீட்கவில்லை என்றால், அந்த சொத்தை பொது ஏலத்தில் விற்று வங்கிக்கு செலுத்த வேண்டிய கடன் மற்றும் வட்டியை வசூலிப்பது தொடர்பாக பரேட் சட்டம் நடைமுறைபடுத்தப்படுகிறது.

இந்த சட்டம் பொருளாதார நெருக்கடியின் போது (2022-2023) தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.
இந்நிலையில் பரேட் சட்டம் நடைமுறை இரத்தை 2025 மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்க, அமைச்சரவை அனுமதியுடன் அரசாங்கம் தீர்மானிந்திருந்தது.
இதற்கமைய இரத்து காலம் நிறைவடைந்து இன்று முதல் மீண்டும் பரேட் சட்டம் நடைமுறைக்கு வருகின்றது.