போருக்கு தயாராகுமாறு வடகொரிய (North Korea) அதிபர் கிம் ஜாங் உன் (Kim Jong Un) தெரிவித்துள்ளமை கொரிய தீப கற்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இந்த அறிவிப்பை இன்று(ஏப்.11) தெரிவித்துள்ளதாக அந்நாட்டின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வடகொரியாவின் இராணுவ பல்கலைக்கழகத்தை அதிபர் கிம் ஜாங் உன் ஆய்வு செய்த நிலையில், வடகொரியாவை சுற்றி நிலைத்தன்மையற்ற அரசியல் சூழல் உள்ளதால், கடந்த காலத்தைக் காட்டிலும் இப்போது போருக்கு ஆயத்தமாக வேண்டியிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவும் தென் கொரியாவும் இராணுவ பயிற்சிகளை அதிகளவில் மேற்கொள்வதை குற்றஞ் சாட்டியுள்ள வட கொரியா, இதன் காரணமாக கொரிய தீபகற்பத்தில் போர்ப் பதற்றம் அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
போருக்கு தயாராகும் முன்னேற்பாடாக வட கொரியா ஏவுகணைகள் பரிசோதனையை அதிகளவில் நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.