உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்தாண்டு ஒக்ரோபரில் 44 பில்லியன் டொலருக்கு ருவிட்டரை விலைக்கு வாங்கினார். அதனை தொடர்ந்து ட்விட்டரில் பல்வேறு மாற்றங்களை எலான் மஸ்க் ஏற்படுத்தி வருகிறார்.ருவிட்டரில் விரைவில் குரல் மற்றும் வீடியோ அழைப்பு வசதியை அறிமுகம் செய்யவுள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க் 4,400 கோடி டொலரில் ருவிட்டா; நிறுவனத்தை கையகப்படுத்தியதையடுத்து, கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் அதன் தலைமைச் செயல் அதிகாரியாகவும் பொறுப்பேற்றார். இதைத் தொடா;ந்து பணியாளர்கள் நீக்கம், பதிவிடும் முறையில் நவீனமயமாக்கம், ட்விட்டர் ப்ளுடிக்கிற்கு கட்டணம் உள்ளிட்ட அவரது அதிரடி நடவடிக்கைகள் சார்ச்சைக்குள்ளாகின.
இந்நிலையில், ட்விட்டரில் விரைவில் குரல் மற்றும் வீடியோ அழைப்பு வசதியை அறிமுகம் செய்யவுள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.ட்விட்டரில் தொலைபேசி இலக்கம் இல்லாமல் ஓடியோ, வீடியோ அழைப்பு பேசும் வசதியை அந் நிறுவனம் கொண்டு வருகின்றது.ருவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் விலைக்கு
வாங்கியதில் இருந்து, இதனை லாபகரமாக மாற்றுவதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.