ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்திலிருக்கும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், குஜராத்தை சேர்ந்த கேம்பா கோலா (campa cola) குளிர்பான நிறுவனத்தை வாங்கியதுடன், அந்த குளிர்பானத்தை சந்தைப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.
இதன்படி ‘the Great indian taste this summer’ என்ற வாசகத்துடன் 50 ஆண்டுகளுக்கு முன்பு கெம்பா கோலா மிகவும் பிரபலமான குளிர்பானமாக இருந்துள்ளது.
இதனை புதிதாக சந்தைப்படுத்தியுள்ள ரிலையன்ஸ் நிறுவனம் கேம்பா கோலா, கேம்பா ஆரஞ்சு, கேம்பா லெமன் என மூன்று வகையான குளிர்பானங்களாக அறிமுகம் செய்துள்ளன.
இந்நிலையில் கேம்பா கோலாவை மேலும் முன்னேற்றும் வகையில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனின் நிறுவனத்துடன், ரிலையன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக முரளிதரனின் சிலோன் பீவரேஜ் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து, அலுமினிய கேன்களில் கேம்பா கோலாவை பெக்கிங் செய்து விநியோகம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக சிலோன் பீவரேஜ் நிறுவனம் வரும் காலத்தில் இந்தியாவில் பெக்கிங் பணிக்காக தொழிற்சாலையை அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1970 – 1980களில் இந்திய கோல்ட் டிரிங்க் சந்தையில் முன்னிலையிலிருந்த கேம்பா கோலா நிறுவனத்தை மீண்டும் சந்தைப்படுத்தியிருப்பதோடு, முரளிதரனுடன் இணைந்திருப்பது வணிக உலகத்தில் பேசு பொருளாகியுள்ளது.