இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேலிய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பதிலடி – இதேவேளை ஈரான் மீது தாக்குதலை முன்னெடுக்க உரிய நேரம் மற்றும் அதன் அளவு தொடர்பில் அமைச்சரவையில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
பிரதமர் நெதன்யாகு, பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் உட்பட முக்கிய தலைவர்கள் கொண்ட போர்க்கால அமைச்சரவை ஞாயிறன்று மீண்டும் கூடியதுடன், ஈரான் தொடர்பில் விரிவான மற்றும் தீவிரமான ஆலோசனையை முன்னெடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அமைச்சரவை மீண்டும் இந்த விவகாரம் தொடர்பில் சந்தித்து முடிவெடுக்க உள்ளது.
அமெரிக்காவின் நிலைப்பாடு – இதனிடையே, இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக அமெரிக்கா உறுதி அளித்திருந்தாலும், ஈரான் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா துணையிருக்காது என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஈரான் மீதான தாக்குதலில் தமக்கு உடன்பாடில்லை என்றே அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அமெரிக்கா அல்லது இஸ்ரேல் தரப்பில் இருந்து பதிலடி தர முன்வந்தால், அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் அறிவிப்போம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.